செய்திகள் மலேசியா
கேமரன் மலையில் நிலச்சரிவு
பெட்டாலிங் ஜெயா:
கேமரன் மலை, Simpang Blue Valley பகுதிக்கு அருகே உள்ள ஜாலான் கம்போங் ராஜாவில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து அதிகாலை 3.15 மணிக்குத் தனது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக மலேசியப் பொது தற்காப்புப் படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒர் அதிகாரி உட்பட 8 பொது தற்காப்புப் படை உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.
நிலச்சரிவுகள் இரு திசைகளிலும் செல்லும் பாதையை அடைத்தன.
தற்போது இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சாலைப் பயன்படுத்துபவர்கள் லிபிஸில் உள்ள Jalan Sungai Koyan வழியாகவும், Jalan Tapah வழியாகவும் கேமரன் மலைக்குச் செல்ல மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று மலேசியப் பொது தற்காப்புப் படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:23 pm
கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
January 7, 2025, 5:06 pm
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்
January 7, 2025, 4:45 pm
ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்
January 7, 2025, 4:31 pm
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
January 7, 2025, 4:27 pm
சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக்
January 7, 2025, 1:07 pm