நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நஜிப் ஆதரவு பேரணியில் களமிறங்கினர்: புத்ராஜெயாவில் பலத்த பாதுகாப்பு 

புத்ராஜெயா: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக புத்ராஜெயாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டுள்ளதாக அண்மைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது 

கூடுதல் உத்தரவு தொடர்பிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை இன்று நடைபெறும் வேளையில் அவரின் ஆதரவாளர்கள் புத்ராஜெயாவில் கூடியுள்ளனர் 

HIDUP BOSSKU என்ற ஸ்லோகங்களுடன் அவரின் ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.  மேலும், பாஸ் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் புத்ராஜெயாவில் இருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், அம்னோவைச் சேர்ந்த டாக்டர் அக்மால் சலேவும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset