நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் பிரதமர் வோங் நாளை மலேசியாவுக்கு வருகை

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு நாளை மலேசியா வருகிறார்.

மலேசிய - சிங்கப்பூர் தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள அவர் புத்ராஜெயாவுக்கு வருகிறார்.

பிரதமர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராஹிமும்  வோங்கும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான பாதையை வகுக்கவுள்ளனர்.

மேலும் இரு உறவு தொடர்பை மேம்படுத்தப் புதிய வழிகளையும் அவர்கள் ஆராயவிருக்கின்றனர்.

நிலுவையிலுள்ள இருதரப்பு விவகாரங்களைச் சமாளிப்பதற்கான முயற்சிகளையும் இரு நாடுகளும் தொடரவுள்ளன.

சிங்கப்பூரும் மலேசியாவும் இடையிலான அரசதந்திர உறவின் 60ஆம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு அனுசரிக்கின்றன.

இதன் அடிப்படையில் வோங்கிற்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விருந்தளித்து உபசரிக்கவிருக்க உள்ளார்.

மேலும்  இரு தலைவர்கள் முன்னிலையில் சில உடன்பாடுகளும் இணக்கக் குறிப்புகளும் கையெழுத்திடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset