செய்திகள் மலேசியா
சட்டவிரோத கழிவுகளை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
சட்டவிரோத கழிவுகளை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சுங்கைபூலோ நாடாளுமன்ற ங்கை உறுப்பினரும் தொழில் முனைவோர் மேப்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
கடந்த வியாழக்கிழமை இங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கழிவுகளை அகற்றும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இச் சம்பவத்தால் இப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதால் இது ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஆக இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளும் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் எடுக்க வேண்டும்.
மேலும், இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மைய அதிகாரிகளை நான் பணித்துள்ளேன்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் மக்களின் நலன், பாதுகாப்பில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
முன்னதாக கம்போங் மெலாயு, ஜாலான் புக்கிட் லெகாங் ஆகிய பகுதிகளை சுற்றி வசிப்பவர்கள், ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்ததாக நம்பப்படும் ஒரு சட்டவிரோத கழிவு தளத்தில் பெரும் தீவிபத்தால் அதிர்ச்சியடைந்ததுடன் ஆரோக்கிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து காற்றை மாசுபடுத்தியது.
மேலும் அப் பகுதியில் இருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வசிக்கும் சுற்றுப்புற குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதித்தது என்று செய்தி வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:23 pm
கத்தியால் உறவுக்கார பெண்ணைத் தாக்கிய 14 வயது சிறுமிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
January 7, 2025, 5:06 pm
நெகிரி செம்பிலான் அரசு ஊழியர்களுக்கு 200 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அமினுடின் ஹருன்
January 7, 2025, 4:45 pm
ஆஸ்கர் விருது பட்டியலில் நுழைந்தது நடிகர் சூர்யாவின் கங்குவா, பிருத்விராஜின் ஆடுஜிவிதம்
January 7, 2025, 4:31 pm
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
January 7, 2025, 4:27 pm
சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் சீருடையில் கேமரா பொருத்தப்படும்: அந்தோனி லோக்
January 7, 2025, 1:07 pm