நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தி லைட் ஹோட்டல் இயக்குநருக்கு டான்ஸ்ரீ ரமேஷுக்கு அனைத்துலக தமிழ் அமைப்பின் தமிழன் விருது வழங்கப்பட்டது

ஜார்ஜ் டவுன்:

அனைத்துலக தமிழ் அமைப்பின் விருதளிப்பு விழாவில் தி லைட் ஹோட்டலின் இயக்குனர் டான்ஶ்ரீ ரமேஷுக்கு சிறந்த தமிழன் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருந்தோம்பல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பையும், 

உலகளவில் தமிழ் பாரம்பரியம், விழுமியங்களை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அனைத்துலக தமிழ் அமைப்பு நடத்திய சிறப்பு நிகழ்வின் போது நடைபெற்ற இவ்விழாவில், அந்தந்த துறைகளில் சாதனைகளை ஏற்படுத்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்களின்  சாதனைகள் கொண்டாடப்பட்டன.

இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்த டான்ஸ்ரீ ரமேஷ், 

உலகளாவிய தமிழ் சமூகம் எனது பங்களிப்பை அங்கீகரிப்பது மிகப்பெரிய கவுரவமமாக நான் கருதுகிறேன்.

இந்த விருது தனிநபர் வெற்றியைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் உலகளவில் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது.

இந்த நிகழ்வில் பிரமுகர்கள், வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றவர்களின் சாதனைகளை அவர் பாராட்டினர்.

மேலும் இந்த விருது எந்த சாதனை தொகுப்பில் மற்றொரு இறகாக சேர்க்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset