செய்திகள் மலேசியா
ஈப்போ கல்லுமலை தைப்பூச கடைகளை ஏலம் எடுப்பவர்கள், மது விற்பனை செய்யவோ புகைபிடிக்கவோ கூடாது: இந்து தேவஸ்தான பரிபாலன சபா
ஈப்போ:
கல்லுமலை ஆலய வளாகத்தில் எதிர்வரும் தைப்பூசத்தை முன்னிட்டு வியாபாரிகளுக்கு கடைகள் ஏலம் விடப்பட்டன. ஆலய வளாகத்தில் 86 கடைகளில் 65 கடைகள் ஏலம் எடுக்கப்பட்டன. மீதம் 21 கடைகள் உள்ளன என்று ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் கெளரவ செயலாளர் வெ.மு. தியாகராஜன் கூறினார்.
அத்துடன், ஆலய வெளிப்புறத்தில் ஈப்போ மாநகர் மன்றத்தின் பார்வையில் செயல்படும் 350 கடைகளில் 127 கடைகள் ஏலம் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 123 கடைகள் இன்னமும் உள்ளன. அதனை ஆலய நிர்வாகத்தை தொடர்புக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, தண்ணீர் பந்தல் போடும் தரப்பினருக்கு கடைகள் 250 ரிங்கிட்டுற்கு வழங்கப்படும். அத்துடன், அங்கு அவர்களது வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு இந்த கடைகளின் உரிமையாளர்கள் ஒரு சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, வியாபாரிகள் சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அதோடு வியாபாரிகள் " டைபாயிட்" ஊசி போட்டிருக்க வேண்டும்.
கடை வளாகத்தில் எந்தவொரு கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்ககூடாது.
அத்துடன் மது அருந்தக்கூடாது. மதுபானங்கள் விற்கக்கூடாது; புகைப்பிடிக்கக் கூடாது என்று அவர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிட்டார்.
ஆலய வளாகத்தில் நிர்வாகத்தினர் அர்ச்சனை தட்டுகளை விநியோகம் செய்வார்கள். இத் தட்டை மட்டுமே வாங்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதோடு வியாபார கூடாரத்தின் முன்புறத்தில் கூடாரத்தை நீட்டம் செய்யும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக தங்கள் வியாபார கூடாரத்தை துப்புரவு செய்து தூய்மையாக வைத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டில் சிறந்ந தைப்பூசத்தை கொண்டாட நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குவோம். அத்துடன் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் ஆலய நிர்வாகத்தினரை தொடர்புக்கொண்டு் தெரியப்படுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 11:56 am
நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் ஜாஹித் ஹமிடி முக்கிய பங்கு வகிக்கிறார்: அனுவார் மூசா
January 7, 2025, 11:56 am
பாலத்திலிருந்து சுங்கை கெடா ஆற்றில் குதித்த இந்திய ஆடவர்: கெடாவில் பரபரப்பு
January 7, 2025, 11:56 am
ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தீ விபத்து: பள்ளியின் ஒரு பகுதி 70% தீயில் அழிந்தது
January 7, 2025, 11:54 am
ஜார்ஜ்டவுன் பாசார் போரோங்கில் அதிரடி சோதனை: 28 அந்நிய நாட்டினர் கைது
January 7, 2025, 11:53 am
நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோவில் நிலைப்பாடு என்ன?: தெங்கு ரசாலி கேள்வி
January 7, 2025, 10:45 am
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு டத்தாரான் பெர்டானாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
January 7, 2025, 10:29 am
மலேசியர்களுக்கு சிறந்த ஓய்வூதிய எதிர்காலத்தை உருவாக்குவதில் ஈபிஎப் முனைப்பு காட்ட வேண்டும்: பிரதமர்
January 7, 2025, 10:16 am