நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில்  ஜாஹித் ஹமிடி முக்கிய பங்கு வகிக்கிறார்: அனுவார் மூசா

கோலாலம்பூர்:

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ   ஜாஹித் ஹமிடி முக்கிய பங்கு வகிக்கிறார்.

இதை யாராலும் மறுக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர்களின் ஒருவரான டான்ஶ்ரீ அனுவார் மூசா இதனை கூறினார்.

மக்களவையில் ஒரு கூடுதல் ஆணை இருப்பது குறித்து முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேள்வி எழுப்பதுடன் இப்பிரச்சினை எழுந்தது.

ஆனால் நஜிப்பிற்கு கூடுதல் உத்தரவை பார்த்ததாக டத்தோஶ்ரீ  ஜாஹித் வாக்குமூலத்துடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோதுதான் இந்த விவரங்கள் அனைவரின் கவனத்திற்கு வந்தன.

எனவே இந்த விவகாரத்தில் அஹ்மட் ஜாஹித் ஹமிடியின் பங்கைக் குறைக்க முடியாது.

ஏனெனில் அவர் ஒரு இறுக்கமான சூழ்நிலையிலும் நஜிப்பின் சட்டக் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset