நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்பு உட்கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தைச் சுகாதார அமைச்சு இவ்வாண்டில் அமல்படுத்தவுள்ளது 

புத்ரா ஜெயா: 

உப்பு உட்கொள்வதற்கு எதிரான பிரச்சாரத்தைச் சுகாதார அமைச்சு இவ்வாண்டில் அமல்படுத்தவுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜுல்கிஃப்லி அஹமத் கூறினார். 

உயர் ரத்த அழுத்தம் போன்ற சுகாதாரப் பிரச்சனைகளை எதிர்க்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டில் சிகரெட் மற்றும் சீனிக்கு எதிரான பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக இந்ந நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார். 

உப்பு பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தைத் தங்களது தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

சத்துணவு தரப்பில், உப்புக்கு எதிரான பிரச்சாரத்தை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதை உறுதிப்படுத்த பொது சுகாதாரத் துறைகள் இணைந்து செயல்படும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset