நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025-ஆம் ஆண்டுக்கான Mrs.Malaysia Tourism Queen International போட்டியில் பட்டத்தை வென்றார் ஆசிரியர் ஶ்ரீ தேவி 

கோலாலம்பூர்: 

சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான சீன மொழி கற்பிக்கும் ஆசிரியர் ஶ்ரீதேவி 2025-ஆம் ஆண்டுக்கான Mrs.Malaysia Tourism Queen International போட்டியில் பட்டத்தை வென்றார்.

வெற்றியாளர் பட்டம் மட்டுமல்லாமல், மிகவும் பிரபலமானவருக்கான விருதையும் ஆசிரியர் ஶ்ரீ தேவி தன் வசமாக்கிக் கொண்டார். 

கடந்த சனிக்கிழமை, ஜனவரி 4-ஆம் தேதி HGH மாநாட்டு மையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான Mrs.Malaysia Tourism Queen International போட்டிக்கான இறுதிசுற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

ஏ, பி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் பங்குப்பெற்றனர். ஆசிரியர் ஶ்ரீதேவி பி பிரிவின் இறுதிச்சுற்று போட்டியாளராகத் திகழ்ந்தார். 

சீனர்கள் ஆதிக்கம் அதிகமுள்ள இப்போட்டியில் உடற்பயிற்சி நடனம், தனித் திறமையை வெளிப்படுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் தனது ஆற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

பல பெண்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் இந்தப் பட்டத்தைப் பல தகுதிச் சுற்றுகளைக் கடந்து நீதிபதிகளின் மனதை வென்று இறுதிச்சுற்றின் பி பிரிவில் ஆசிரியர் ஶ்ரீதேவி வென்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset