செய்திகள் மலேசியா
BREAKING NEWS: மாமன்னர் உத்தரவுக்கு மதிப்பளித்து பேரணியை அம்னோ ரத்து செய்கிறது: அஸ்ரப்
கோலாலம்பூர்:
மாமன்னர் உத்தரவுக்கு மதிப்பளித்து நஜிப் ஆதரவு பேரணியை அம்னோ ரத்து செய்கிறது.
அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ அஸ்ரப் வஜ்டி டாசுகி கூறினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை நிலைநிறுத்தும் கொள்கையின் அடிப்படையிலும்,
போலிஸ்படைத் தலைவரின் அறிவுறுத்தலின்படியும் அம்னோ இந்த பேரணியைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தது.
மேலும் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக்கிற்கு நீதி வழங்குவதில் மாமன்னரின் கருணை, அதிகாரத்தின் மீது கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது.
அம்னோ தலைமையகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லாத போதிலும், தார்மீக ஆதரவை வழங்குவதற்கான உயர் அர்ப்பணிப்பை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அம்னோ நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.
மக்களுக்கும் நாட்டிற்கும் நிறைய சேவை செய்த முன்னாள் பிரதமருக்கு எதிராக மேல்முறையீடு செய்வதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட சட்ட வழிகளைப் பயன்படுத்துவதற்கு மாமன்னரின் தனிச்சிறப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின் அனைத்து பரிந்துரைகளையும் அம்னோ பணிவுடன் ஏற்றுக் கொள்கிறது.
அம்னோ அரசியலமை சட்டத்தை ஒருபோதும் புறக்கணிக்காது.
மாமன்னரிம் உத்தரவின்படி எந்த விதிகள், சட்டங்கள் அமைக்கப்பட்டாலும் அதை தொடர்ந்து மதிக்கும் என்று அவர் ஓர் அறிக்கை மூலம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 10:30 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் நாளை மலேசியாவுக்கு வருகை
January 5, 2025, 8:18 pm
தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm