நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே
மஇகா மாற்றியுள்ளது. இதை யாரும் திசை திருப்ப வேண்டாம் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புத்ராஜெயாவில் நாளை கூட்டம் நடத்தப்படவிருந்து.

இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அம்னோ அதில் இருந்து விலகிக் கொண்டது.

ஆனால் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கான ஆதரவில் மஇகா உறுதியாக உள்ளது. அதனால் நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்தை மஇகா தொடரவுள்ளது.

புத்ராஜெயாவில் ஆதரவுக் கூட்டத்தை நடத்த போலிஸ் அனுமதி தரவில்லை. இதனால் இக்கூட்டத்தை மஇகா பத்துமலையில் நாளை காலை 11.00 மணிக்கு நடத்தவுள்ளது. பிரார்த்தனையுடன் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நஜிப் பிரதமராக இருந்த போது  மஇகாவுக்கு அள்ளிக் கொடுத்தார் என்பதற்காக இக் கூட்டத்தை நாங்கள் நடத்தவில்லை.

அவர் உண்மையிலேயே ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகளை செய்துள்ளார். அதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ  முடியாது.

அதே வேளையில் வீட்டு காவல் விவகாரத்தில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே மஇகாவின் இலக்காகும்.

ஆகவே இந்திய சமூக மக்கள் திரளாக வந்து மஇகாவுடன் இணைந்து நஜிப்பிற்கு ஆதரவு தர வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset