நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை.

இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வீட்டுக் காவலுக்கான கூடுதல் உத்தரவு வழங்கப்பட்டதா என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

இதன் அடிப்படையில்தான் நாளை நஜிப்பிற்கு ஆதரவாக புத்ராஜெயாவில் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் பொது மன்னிப்பு விவகாரத்தில் உள்ள மாமன்னரின் சிறப்புரிமைகள் குறித்து இஸ்தானா நெகாரா அறிக்கை வாயிலாக தெளிவுப்படுத்தியது.

இந்த அறிக்கையை தொடர்ந்து அம்னோ இக் கூட்டத்தில் இருந்து விலகி கொண்டது. ஆனால் மஇகா இந்த கூட்டத்தை தொடர உள்ளது.

இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகிறது. இந்த விவகாரத்தில் மாமன்னரின் அதிகாரத்தையும் உத்தரவையும் மஇகா முழுமையாக மதிக்கிறது.

அதே வேளையில் நஜிப்பிற்கு யாரும் ஆதரவு தரக்கூடாது. ஆதரவு கூட்டத்தை யாரும் நடத்தக் கூடாது என மாமன்னர் உத்தரவிடவில்லை.

ஆகையால், நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்தை மஇகா தொடரும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset