நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னர் உத்தரவிட்டார் என்பதற்காக ஆட்சியமைத்த அரசாங்கம் கூடுதல் உத்தரவை மறைத்ததா? பரவலாக எழும் கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மாமன்னர் உத்தரவிட்டார் என்பதற்காக ஆட்சியமைத்த அரசாங்கம் நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான கூடுதல் உத்தரவை மறைத்ததா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

ஆக இவ்விவகாரத்தில் பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் நாட்டின் 16ஆவது மாமன்னர் உத்தரவிட்டார் என்பதற்காக தேசிய முன்னணியும் நம்பிக்கை கூட்டணியும் இணைந்து ஆட்சியமைத்தது.

அதே மாமன்னர் தான் சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டில் கழிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த கூடுதல் உத்தரவை பார்த்த சாட்சிகளும் உள்ளனர். இதன் அடிப்படையில்தான் நாளை நீதிமன்ற வழக்கும் நடைபெறவுள்ளது.

இந்த விவரத்தில் உண்மையிலேயே நஜிப்பிற்கு மாமன்னர் இந்த கூடுதல் உத்தரவை வழங்கினாரா இல்லையா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

உண்மையிலேயே அவ்வாறு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்றால் அதை அரசாங்கம் தெளிவாக கூறிவிடலாம்.

அப்படி கூடுதல் உத்தரவு இருந்து மறைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம்.

மாமன்னரின் உத்தரவை மறைப்பது என்பது தேச நிந்தனை குற்றமாகும். 

இப்படி இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் மிகவும் எளிமையான முறையில் தீர்வு கண்டிருக்கலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில்தான் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

ஆகவே இந்த விவாகரத்தில் அரசாங்கம் முழு விளக்கத்தை தர வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset