நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம்: ஐஜிபி

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை வலியுறுத்தினார்.

மாமன்னர் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பான எந்த ஒரு கூட்டத்திலும் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம்.

இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை, பொது அமைதி, பாதுகாப்பு குறித்த கவலைகளை தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறினார்.

எந்தவொரு கட்சி நடத்தும் எந்தக் கூட்டத்திலும் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம்.

நாட்டின் செழிப்பு, நல்லிணக்கத்தின் தூண்களான ருக்குன் நெகாராவின் கொள்கைகளை, 

குறிப்பாக அரசியலமைப்பின் கண்ணியத்தை எப்போதும் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே எந்தப் பேரணி அது என்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும்,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக திங்கட்கிழமை நடைபெறும் பேரணியை ரஸாருடின் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset