நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் ஆதரவு பேரணி ஒற்றுமை அரசாங்கத்தைப் பாதிக்காது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணி ஒருபோதும் ஒற்றுமை அரசாங்கத்தைப் பாதிக்காது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனைக் கூறினார்.

ஒரு காலத்தையும் தேசிய முன்னணியையும் நாட்டையும்  வழிநடத்திய ஒரு தலைவருக்கு ஆதரவு தான் இப்பேராணியாகும்.

நஜிப் இந்த நாட்டிற்கு நீண்ட காலமாகச் சேவையாற்றியவருடன் மிகவும் புகழுடையவர். 

உண்மையில், அவர் பிரதமரானபோது,  நாட்டின் வளர்ச்சிக்குப் பல பங்களிப்புகளைச் செய்தார்.

குறிப்பாக தேசிய முன்னணியை வழிநடத்தும் போது அவருடைய சேவைகளை நாங்கள் பாராட்டுகிறோம்.

அண்டை நாடுகளில் உள்ள தலைவர்களைப் போல அவர் பொதுமன்னிப்பு பெறுவதற்கு முன் மற்ற நாடுகளுக்குத் தப்பிச் செல்லவில்லை. 

மாறாக, நஜிப் சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்வதிலும், தனது உரிமைகள், நீதிக்காகப் போராடுவதிலும் உறுதியாக இருக்கிறார்.

விசாரணை இவ்வளவு விரைவாக நடத்தப்பட்டாலும், நீதித்துறையின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார்.

ஆகையால் இந்த ஒற்றுமை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். எந்தவொரு தரப்பினராலும் சிக்கலாக இருக்கக்கூடாது, 

மாறாக தற்போது அமைதியான முறையில் நடந்து வரும் செயல்முறையை மதிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நான் சந்தித்தபோது, ​​மன்னிப்புக் கோரும் நஜிப் பிரச்சினைக்கு நான் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

மாறாக இந்த விஷயத்தை அதிகாரிகளைக் கையாள அனுமதித்தேன்

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த முடிவு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படவில்லை. அது முந்தைய மாட்சிமை தங்கிய மாமன்னரின் தனிச்சிறப்பாகும் என விளக்கினார்.

ஆக இந்த ஒற்றுமை பேரணி என்பது எதிர்ப்பு அல்ல. நாட்டுக்கு அதிக சேவை செய்த ஒரு தலைவருக்கு செய்யும் மரியாதையாகும்

இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அதன் அடிப்படையில்  அரசாங்கத்தை எதிர்ப்பது அல்லது கவிழ்க்க  என்ற கேள்விக்கு இடமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset