நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா

கோலாலம்பூர்:

இவ்வாண்டு நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்.

புரோட்டோன் ஹோல்டிங்ஸ் துணை இயக்குநர் ரோஸ்லான் அப்துல்லா இதனை கூறினார்.

மலேசியாவின் முதல் மின்சார வாகனமாக புரோட்டோன் இ மாஸ் கார் விளங்குகிறது.

அதே வேளையில் நாட்டின் முதல் மின்சார காரை தயாரித்ததில் புரோட்டோன் பெருமை கொள்கிறது.

இப்புரோட்டோன் இ மாஸ் காரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்து வைத்தார்.

இப்புதிய மின்சார கார் மலேசிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிநவீன வசதிகளுடன் இக்கார் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 நிமிடம் சார்ஜர் செய்வது மூலம் 135 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.

ஆக மொத்தத்தில் இக்கார் மலேசியர்களின் பயன்பாட்டிற்கு பெரும் பயனாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் தற்போது ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு இறுதிக்குள் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்களை திறக்க புரோட்டோன் இலக்கு கொண்டுள்ளது.

இதன் மூலம் புரோட்டோன் இ மாஸ் கார் நேரடியாக மக்களை சென்றடையும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset