நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரோட்டோன் கார் விற்பனையில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு: ஜோனி யாப்

கோலாலம்பூர்:

புரோட்டோன் கார் விற்பனையில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜோனி யாப் இதனை கூறினார்.

கோலாலம்பூர் சிகாம்புட்டில் சஹாயா டெக்னோலோஜி நிறுவனத்தின் புரோட்டோன் கார் விற்பனை மையம் அமைந்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்விற்பனை மையம் இங்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது புதியதாக புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையத்தையும் இன்று சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் திறந்துள்ளது.

புரோட்டோன் இ மாஸ் என்பது மலேசியாவின் முதல் மின்சார காராகும்.

இந்த இ மாஸ் மின்சார கார் இப்புதிய மையத்தில் முழுக்க முழுக்க விற்பனைக்கு வைக்கப்படும்.

13 புரோட்டோன் இ மாஸ் காரை நிறுத்தும் அளவிற்கு புதிய விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

30 கார் நிறுத்துமிடங்கள், வாடிக்கையாளர்களுக்கான அறைகள், இருக்கைகள், கார் சார்ஜர் மையங்கள் என அனைத்து வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விற்பனை மையத்தை தொடர்ந்து புரோட்டோன் கார் விற்பனையில் கோலாலம்பூர் தவிர்த்து இந்த வட்டாரத்தில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது என்று ஜோனி யாப் கூறினார்.

புரோட்டோன் இ மாஸ் விற்பனை மையத்தின் திறப்பு விழாவில் புரோட்டோன் ஹோல்டிங்ஸ் துணை இயக்குநர் ரோஸ்லான் அப்துல்லா, புரோ நெட் விற்பனை பிரிவு தலைவர் சலாவத்தி, சஹாயா டெக்னோலோஜி நிறுவனத்தின் இயக்குநர் யாப் கிம் போ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset