நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப் பிரதமர் ஜாஹிட், டிஏபி தலைவர் லிம் குவான் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர் :

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹம்மத் ஜாஹித் ஹமிடி, டிஏபி தலைவர் லிம் குவான் எங் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு பிரச்சனை இல்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அஹ்மத் ஜாஹித்தின் அறிக்கையானது குவான் எங்கின் முந்தைய அறிக்கையின் பிரதிபலிப்பாகும். 

முன்னதாக, அம்னோ எதிர்கட்சியான பாஸ் உடன் இணைத்து நடத்தும் நிகழ்ச்சியும் திட்டமும் ஒற்றுமை அரசாங்கத்தின் நிம்மதியைச் சீர்குழைக்கக்கூடும் என்பது  அவ்வறிக்கையில் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்குடன் தொடர்பான கூட்டங்களும் அதில் அடங்கும். 

அம்னோவைப் புண்படுத்த வேண்டாம் என்று  ஜாஹித் அவருக்குப் பதிலளித்தார்.  

டிஏபி தலைவரின் காலம் கடந்துவிட்டது என்றும், சம்பந்தப்பட்ட பாகன் நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய தலைமையை நம்ப வேண்டும் என்று  அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

- தர்மவதி கிருஷ்ணன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset