நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிகளில் பகடிவதையை ஒழிக்க அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்: சமூகப் பாதுகாப்பு சங்கம்

கோலாலம்பூர்:

பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிராக நடந்து வரும் பகடிவதையை ஒழிக்க பெற்றோர்கள்,ஆசிரியர்கள், மக்கள் என அனைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என்று சமூகப் பாதுகாப்பு சங்கத் தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தாய் கேட்டுக்கொண்டார். 

பள்ளிகளில் நடக்கும் பகடிவதைகளை மறைக்கவோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது என்றும் இது மாணவர்களின் படிப்பையும், மனநலனையும் பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், பகடிவதை மனிதநேயத்தை சிதைப்பது மட்டுமல்லாது வன்முறை கலாச்சாரத்தையும் வளர்க்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

பள்ளிகளில் பகடிவதைகள் நடக்க முற்ப்பட்டால் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகிகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, பகடிவதை அதன் விளைவுகள் குறித்துப் பெற்றோர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விவரித்தார்.  

- கௌசல்யா ரவி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset