நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பிற்கான ஆதரவு பேரணியில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது மசீச

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஆதரவாக PAS ஏற்பாடு செய்துள்ள ஒற்றுமை பேரணியில் பங்கேற்பதற்காக மலேசிய சீன சங்கம் ( MCA )அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த அமைதி பேரணி, புத்ராஜெயாவில் நஜீப்பை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் ஜனவரி 6-ஆம் தேதி நடக்கின்றது.

இந்தப் பேரணியின் குறித்து அம்னோ இரண்டு வாரங்களுக்கு முன் தங்கள் உறுப்பினர்களுக்கு தகவல் வழங்கியதாகவும், நஜீப் ரசாக்குக்கு ஒற்றுமையை வெளிப்படுத்த அம்னோ முன்னாள் தலைவருக்கு ஆதரவாக அதன் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் கூறியது.

“நீதியை நிலைநிறுத்தவும் உண்மையை கேட்கவும் மசீச அமைதியான இந்த பேரணியில் அனைத்து நிலைகளிலுள்ள தலைவர்களையும் உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அழைக்கிறது,” என அவர்கள் இன்று தங்களது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மஇகாவை பிரதிநிதித்து 1000க்கும் அதிகமானவர்கள் இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்பார்கள் என அதன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் நேற்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset