நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்தானா நெகாராவின் அறிக்கையைப் படித்துப் பேரரசரின் உத்தரவைப் பின்பற்றுங்கள்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டைனையைக் குறைக்கவோ பேரரசருக்கு மட்டுமே அதிகாரமுண்டு என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கையைப்  படித்துப் பேரரசரின் உத்தரவைப் பின்பற்றுங்கள் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

பேரரசரின் அதிகாரத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைப் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டைனையைக் குறைக்கவோ பேரரசருக்கு மட்டுமே அதிகாரமுண்டு என்று இஸ்தானா நெகாரா வெளியிட்டுள்ள அறிக்கைகுக் கருத்து தெரிவிக்க அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த அறிக்கை புத்ரா ஜெயாவில் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ஆதரவு பேரணியுடன் தொடர்புடையதா என்று கேட்டதற்கு இஸ்தானா நெகாரா அறிக்கையைப் படிக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.

குற்றச்சாட்டிற்கான நீதிமன்ற தண்டனைகளை குறைப்பதற்கும் நிறுத்துவதற்கும் அதிகாரம் பெற்றவர் பேரரசர்  என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு, ஜனவரி 6 அன்று முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. அந்த நாளில், நஜீப், தனது சிறைத்தண்டனையின் மீதியை வீட்டுத் தனிமைப்படுத்தலில் கழிக்க அனுமதி கோரிய வழக்குக்காக நீதிமன்றத்தில் முன்னைப்படுத்தப்படவுள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை தலைமை வழக்கறிஞர் அலுவலகம், மன்னிப்பு குழுவின் பரிந்துரையால் மட்டுமே இந்த வகை கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும் என்று தெரிவித்தது.

நஜீப் தற்போது SRC இன்டர்நேஷனல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதில் மன்னிப்பு குழுவின் மூலம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset