செய்திகள் மலேசியா
இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நால்வர் மரணமடைந்த சம்பவத்திற்கு போதைப் பொருள் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
ஷாஆலம்:
இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நால்வர் மரணமடைந்த சம்பவத்திற்கு போதைப் பொருள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.
பிங்க்ஃபிஷ் எனப்படும் மாபெரும் புத்தாண்டு கொண்டாட்ட இசை நிகழ்ச்சி பண்டார் சன்வேவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.
அவர்களின் மறைவுக்கு போதைப் பொருள் காரணமாக இருக்கலாம் என போலிஸ் சந்தேகிக்கிறது.
அதே வேளையில் போதைப் பொருள்கள் நிகழ்வு நடந்த இடத்தில் கொண்டு வரப்பட்டு வாங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இறந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பாதிக்கப்பட்டவர்கள் எக்ஸ்டசி மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் உறுதிப்படுத்தலுக்காக நச்சுயியல் ஆய்வியல் அறிக்கைக்காக போலிஸ் இன்னும் காத்திருக்கிறது.
இது தொடர்பான விசாரணைக்கும் பலர் அழைக்கப்படுவர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm
நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 11:49 am
நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும்
January 5, 2025, 11:22 am
நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா
January 5, 2025, 11:20 am