நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெக தலைவர்கள் தொடர்பான அதிருப்தியின் காரணமாக தலைநகரில் கண்டன மறியல்

கோலாலம்பூர்:

ஜசெக தலைவர்கள் தொடர்பான அதிருப்தியின் காரணமாக தலைநகரில் கண்டன மறியல் நடைபெற்றது.

கம்போங் பாரு மஸ்ஜித் ஜாமிக் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகைக்கு பின் 200க்கும் மேற்ப்பட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே கூடி தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

போர்ட்டிக்சன் பெர்சத்து தலைவர் பட்ரூல் ஹிசாம் உட்பட பாஸ், பெர்சத்து கட்சியை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இம்மறியல் தற்போதைய சில பிரச்சினைகள், குறிப்பாக ஜசெக தலைவர்கள் தொடர்பான அதிருப்தியின் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிக்கைகள் நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உடனடி நடவடிக்கைகள் வேண்டும் என அங்கு கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset