நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இவ்வாண்டு சொத்துடைமை விற்பனை  10 சதவீதம் அதிகரிக்கும்: ஆர்எச்பி வங்கி

கோலாலம்பூர்:

2025 ஆம் ஆண்டில் சொத்துடைமை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவிகிதம் அதிகரிக்கும்.

ஆர்எச்பி முதலீட்டு வங்கி இதனை கணித்துள்ளது.

சில மேம்பாட்டாளர்கள் நில இருப்புகளை பாதுகாப்பதற்கு சாத்தியமான மலிவு விலை வீடுகள், நடுத்தர வகையிலான உயர்தர தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

அதே வேளையில் பல மேம்பாட்டு நிறுவனங்கள் வணிக, தொழிற்பேட்டைகளை கட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர்.

இதில் இஸ்கந்தர் மலேசியா திட்டம் தொடர்ந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கும்.

மேலும் 2025 ஆம் ஆண்டில் அதிக திட்டங்கள் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் சொத்துடைமையில் ஒட்டுமொத்த தேவை, பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாக இருக்கும் என அவ்வங்கி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset