நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்தவரின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாக நம்பப்படும் பெண்ணை தாக்கிய ஐவர் கைது

தாவாவ்:

அடுத்தவரின் கணவருடன் தொடர்பு வைத்திருந்ததாக நம்பப்படும் தனித்து வாழும் பெண்ணை தாக்கிய ஐவரை போலிசார் கைது செய்தனர்.

தாவாவ் மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் ஹுசின் இதனை  கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, தாவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கார் நிறுத்துமிட பகுதியில் 36 வயதுடைய பெண் தாக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 முதல் 62 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண்களை போலிசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் தனது காரில் ஏற முற்பட்டபோது வர் கடுமையாக தாக்கப்பட்டார்.

அதே வேளையில் அவரின் காரின் டயர்களும் ஓட்டையாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் அவரது முகம், முதுகு,தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலிசில் புகார் செய்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்  என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset