நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரணிக்கான ஆதரவை கண்டு நஜிப் நெகிழ்ச்சியடைந்தார்

கோலாலம்பூர்:

புத்ராஜெயாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கான ஆதரவை கண்டு டத்தோஶ்ரீ நஜிப் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

நஜிப்பின் புதல்வர் நஜிபுதீன் நஜிப் இதனை கூறினார்.

புத்ராஜெயாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி  நஜில் ரசாக்கிற்கான ஒற்றுமை பேரணி நடத்தப்படவுள்ளது.

இப்பேரணிக்கு கிடைத்து வரும் வலுவான ஆதரவை கண்டு அவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

அதே வேளையில் அனைத்துக் கட்சிகளின், குறிப்பாக அம்னோ தலைவர்கள், உறுப்பினர்களின் நேர்மையான முயற்சிகள் குறித்து தனது தந்தை நன்றி தெரிவித்தார்.

இதில் பேருந்துகள், கார்கள் உட்பட அசைக்க முடியாத தார்மீக ஆதரவும் அதில் அடங்கும்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் நன்றிகளை தெரிவித்து கொண்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset