நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டைனையைக் குறைக்கவோ பேரரசருக்கு மட்டுமே அதிகாரமுண்டு: இஸ்தானா நெகாரா

கோலாலம்பூர்: 

கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கவோ தண்டைனையைக் குறைக்கவோ பேரரசருக்கு மட்டுமே அதிகாரமுண்டு என்று இஸ்தானா நெகாரா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

எந்தவொரு தரப்பினரும் எந்தவொரு கைதிக்கும் பொதுமன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் என்று முன்மொழிய விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தைப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திடம் சம்பந்தப்பட்ட கைதி சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டரசு அரசியலமைப்பின் 42(1) மற்றும் (2) சட்ட விதிகளின்படி  
எந்தவொரு குற்றத்திற்கும் மன்னிப்பு, தண்டனை குறைப்பு வழங்க பேரரசருக்கு தனி அதிகாரம் உள்ளது.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு தண்டனையையும் அவரது மாட்சிமை நீக்கலாம், இடைநீக்கம் செய்யலாம் அல்லது தண்டனையைக் குறைக்கலாம். 

இந்த அதிகாரம் அவரது மாட்சிமையின் தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையுடன் பயன்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பு மற்றும் நிறுவப்பட்ட சட்டங்களை மதிக்க அனைத்து தரப்பினரும் நினைவூட்டப்படுகிறார்கள் என்று  இஸ்தானா நெகாராவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset