நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விரைவில் அமைச்சரவை கூட்டம்: பிரதமர்

புத்ரா ஜெயா:

மடானி அமைச்சரவை மூன்றாவது பிரிவு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தற்போது வரை அடைந்த வெற்றிகளை மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யவும் இந்தச் சந்திப்புக் கூட்டம் வாய்ப்பாகவும் அமையும் என்றும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

அமைச்சரவைக்குள் தீவிரத்தன்மையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தச் சந்திப்புக் கூட்டம் அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும். அமைச்சகங்களின் செயலாளர்கள், மேலாளர்கள், பொது இயக்குநர்களும் இதனை தொடர்வார்கள் என்று புத்ராஜெயாவில் நடந்த பிரதமர் துறையின் மாதாந்திர சந்திப்புக் கூட்டத்திற்கு பிறகு இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் துணை பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹம்மத் ஜாஹித் ஹமிடி, அரசாங்கச் செயலாளர் தான்ஸ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அன்வாரின் முதல் மற்றும் இரண்டாவது பிரிவு கூட்டங்கள் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், முறையே ஜனவரியில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset