செய்திகள் மலேசியா
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்: குணராஜ்
சிப்பாங்:
கேஎல்ஐஏ விமான நிலையங்களில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
கிட்டத்தட்ட 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் அவர்கள் விமான நிலையங்களில் ஒரு சில சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
போக்குவரத்து அமைச்சின் அதிரடி நடவடிக்கையின் வாயிலாக முதல் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் இன்று சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
ஐயப்ப பக்தர்கள் விமான நிலையத்தில் காத்திருப்பதற்கான சிறப்பு இடம் வழங்கப்பட்டது.
அதே வேளையில் சோதனை இடங்களில் சிறப்பு வழித்தடமும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
இதன் வாயிலாக அவர்கள் முழு வசதியுடன் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சுக்கு எனது நன்றிகள்.
அதே வேளையில் மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர், ஏர் ஆசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கும் எனது நன்றி.
ஐயப்ப பக்தர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஒற்றுமையுடன் பிரார்த்தனைகளுக்கு சென்று வர வேண்டும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 5, 2025, 2:47 pm
அரசவை குறித்து தனது பதிவு இல்லை: பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் விளக்கம்
January 5, 2025, 1:33 pm
நஜிப்பிற்கான ஆதரவு கூட்டத்திற்கான இடத்தை மட்டுமே மஇகா மாற்றியுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 1:33 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு ஆதரவாக பேரணி நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது: பிகேஆர் எம்.பி கருத்து
January 5, 2025, 12:42 pm
நஜிப்பிற்கு ஆதரவாக கூட்டம் நடத்த வேண்டாம் என மாமன்னர் உத்தரவிடவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
January 5, 2025, 11:49 am
நஜிப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சி நிச்சயமாக கலந்து கொள்ளும்
January 5, 2025, 11:22 am
நாடு முழுவதும் 40 புரோட்டோன் இ மாஸ் கார் விற்பனை மையங்கள் திறக்கப்படும்: ரோஸ்லான் அப்துல்லா
January 5, 2025, 11:20 am
புரோட்டோன் கார் விற்பனையில் முன்னோடியாக விளங்க சஹாயா டெக்னோலோஜி நிறுவனம் இலக்கு: ஜோனி யாப்
January 5, 2025, 10:12 am
மலாயாப் பல்கலைக்கழகத்தில் மீண்டுமொரு பூனை வெறிநாய்களுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளது
January 5, 2025, 8:44 am