நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2 மணி நேரமாக பெய்த கனமழையை தொடர்ந்து அலோர்ஸ்டாரில் வெள்ளம்

அலோர்ஸ்டார்:

இடைவிடாது 2 மணி நேரமாக பெய்த கனமழையை தொடர்ந்து அலோர்ஸ்டாரில்  வெள்ளம் புகுந்தது.

நேற்று மாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இங்குள்ள சுல்தானா பஹியா நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பகுதியில் உள்ள பாதை முழுவதும் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நிரம்பியிருப்பதால், சாலையைப் பயன்படுத்துபவர்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், கனமழை காரணமாக தாமான் உடா, ஜாலான் சுல்தானா, பல எரிவாயு நிலையங்களின் நுழைவாயில்களும் வெள்ளத்தில் மூழ்கின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset