நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழகத்தில் மீண்டுமொரு பூனை வெறிநாய்களுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளது 

கோலாலம்பூர்: 

மலாயாப் பல்கலைக்கழகத்தின் கார் நிறுத்துமிடத்தின் ஒன்றில் பூனை ஒன்று வெறிநாய்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மலாயாப் பல்கலைக்கழகத்தில் மீண்டுமொரு பூனை மரணமடைந்திருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது 

நள்ளிரவு 1.30 மணிக்கு வெறிநாய்கள் பூனையைக் கடித்து கொண்டிருப்பதை பல்கலைக்கழக மாணவர்கல் கண்டனர் என்று பிரிக்ஃபீல்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர் கூ மஷாரிமான் கூ மஹ்மூத் கூறினார் 

பூனை மரணமடைந்து விட்டதாகவும் அதனை புதைத்து விட்டு பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். 

மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனைகள் தொடர்ந்து மரணமடைந்து வருவது தொடர்கதையாக வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 24ஆம் தேதி காவல்துறை விசாரணையைத் தொடங்கியிருந்தது 

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset