நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் நலன் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும் : பிரதமர் அன்வார் 

புத்ரா ஜெயா :

கடுமையான வறுமையை ஒழித்தல், வெள்ளக் கட்டுப்பாடு போன்ற அதீத தேவை உள்ள, மக்களுக்கான அனைத்து அத்தியாவசிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025 ஆம் ஆண்டுக்கான பிரதமர் துறை கூட்டத்தில் வலியுறுத்தினார். 

நீண்ட காலம் எடுக்கும் திட்டங்கள் முடிந்தவரை குறுகிய காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

உதாரணாமாக, வெள்ளப் பேரிடரில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் வேளையில் வெள்ளக் கட்டுப்பாடு திட்டத்தைச் செயல்படுத்த ஆறு வருட காலம் தேவை இல்லை. 

அந்த வெள்ளக் கட்டுப்பாடு திட்டத்தைக்  குறுகிய காலத்தில் செயற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

எனவே நாட்டின் தலைமை செயலாளர் அமைச்சகமும் மக்களின் பொது நலன் கருதி இந்தத் திட்டங்களைப் உற்றுநோக்கி, அதன் செயல்முறைகளைக் கண்டறிய வேண்டும். 

இல்லையென்றால், தலைமை செயலாளர் அமைச்சகம் புதிதாக மாற்றியமைக்கப்படும். 

பின்னர் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை அந்தப் புதிய தலைமை செயலாளர் அமைச்சகமே கண்காணிக்கும்.

- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset