நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு ஆண்டுகள் அரசியல் நிர்வாகத்தில் ஊழல்கள் எதுவும் நடக்கவில்லை: பிரதமர் அன்வார் 

புத்ரா ஜெயா:

இரண்டு ஆண்டுகளில் தனது அரசியல் நிர்வாகத்தில் ஊழல்கள் எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.

அரசாங்கத் துறைகளில் எந்த உழல்கள் சம்மந்தப்பட்ட வழக்குகள் பதிவாகாத நிலையில் ஊழலற்ற முறையான நிர்வாகத்தை வலுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிப்படையான,முறையான குத்தகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது மடானி அரசாங்கத்தின் வெற்றியைக் காட்டுகிறது.

நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சட்டத்திற்கு உட்பட்டு தீர்வுகளைக் கண்டறிய முடியும் என்று 2025-ஆம் ஆண்டின் பிரதமர் துறையின் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

- கௌசல்யா ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset