நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 முதல் காய்கறிகளை வளர்க்கத் தொடங்குங்கள்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

பினாங்கு: 

மலேசியர்கள் 2025 ஆம் ஆண்டை சுயமாக   காய்கறிகளை பயிரிடும் ஆண்டாக தொடங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டு உணவுப் பொருட்களின் விலை உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில் பயனீட்டாளருக்க்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று நம்பப்படுவதாக அச்சங்கத்தின் துணைத்தலைவர் ஃபாத்திமா இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

காய்கறி விலை உயர்வின் சுமையைக் குறைக்க, புதிய ஆண்டின் தொடக்கத்தில், பல வகையான காய்கறிகள், மூலிகைச் செடிகளையும் வளர்க்குமாறு பொதுமக்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  கேட்டுக்கொள்கிறது. 

சுற்றுச்சூழல் கல்வி பற்றி மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.

சுற்றுச்சூழல் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும், ஏனெனில் அது நாம் வாழும் சூழலைப் பற்றியது என்றார் ஃபாத்திமா.

காலநிலை மாற்றம், கனமழை, புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பிற சுற்றுச்சூழல் பேரழிவுகளை இயற்கை நிகழ்வுகள் மற்றும் மனித நடவடிக்கைகளால் எதிர்கொள்கிறோம்.

ஆனால், நமது இளைய தலைமுறையில் பெரும்பாலானோர் குறிப்பாக மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.

பெரியவர்கள்கூட இது கடவுளின் செயல் என்று நினைக்கிறார்கள். 

இருப்பினும் காடழிப்பு, நகரமயமாக்கல், போதிய உள்கட்டமைப்பு போன்ற மனித நடவடிக்கைகள் இயற்கை பேரழிவுகளின் விளைவுகளை மோசமாக்குகின்றன.

கிரகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை இளம் குழந்தைகளுக்கு கற்பிப்பது முக்கியம். 

குழந்தைகள் தங்கள் ஆர்வத்தினாலும், வெளியில் இருக்கும் அன்பினாலும் கிரகத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு இதுவே சிறந்த நேரம்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆகவே 2025 புத்தாண்டில் காய்கறி செடிகள், மூலிகை செடிகளை நட்டு இயற்கையை பாதுகாப்போம் என்றார் ஃபாத்திமா இத்ரிஸ்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset