நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் கூடுதல் உத்தரவை நம்பியுள்ளார்; புதிய மன்னிப்புக்கு விண்ணப்பிக்க எந்த உத்தரவும் இல்லை: ஷாஃபி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூடுதல் உத்தரவை மட்டுமே நம்பியுள்ளார்.

புதிய மன்னிப்புக்கு விண்ணப்பிக்க அவர்  எந்த உத்தரவையும் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று அவரின் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாஃபி அப்துல்லாஹ் விளக்கினார்.

முன்னாள் பிரதமர் தாக்கல் செய்யும் புதிய மன்னிப்பு மனு தொடர்பாக தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை.

இதன் அடிப்படையில் நஜிப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை இந்த திங்கட்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மேலும் எந்த முடிவும் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு, 

கூடுதல் ஆணையை நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளின் முடிவையும் நஜிப்பின் வழக்கறிஞர் குழு ஆய்வு செய்யும்.

நஜிப்பிடம் அரச மன்னிப்புக் கூறுகளின் ஒரு பகுதியாக இருக்கும் துணைக் கட்டளை தொடர்பான மேல்முறையீட்டை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

இந்த மேல்முறையீடு நஜிப்பின் முந்தைய மன்னிப்பு விண்ணப்பத்தின் தொடர்ச்சியாகும்.

எனவே நாங்கள் புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய முடியாது. ஏனெனில் இரட்டை வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்படலாம்

இது ஏற்கெனவே உள்ள விண்ணப்பத்தை பாதிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset