நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை 140 அடி உயர முருகனுக்கு பன்னீர் அபிஷேக விழா: விமரிசையாக நடைபெற்றது

பத்துமலை:

பத்துமலை 140 அடி உயர முருகனுக்கு பன்னீர் அபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முயற்சியில் 140 அடி உயர முருகன் சிலை பத்துமலையில் கட்டப்பட்டது.

தற்போது இச் சிலை மலேசியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில் ஒவ்வோர்

ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு இம்முருகப் பெருமானுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 9ஆம் ஆண்டு பன்னீர் அபிஷேக விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் நடைபெற்றது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலையிலேயே பத்துமலையில் கூட தொடங்கி விட்டனர்.

காலை முதல் ஆலயங்களில் நடைபெற்ற பூஜைகளிலும் அவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset