
செய்திகள் ASEAN Malaysia 2025
ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்புக்கு எம்இஎஃப் தலைமையேற்கிறது: டத்தோ சைட் ஹுசைன்
கோலாலம்பூர்:
ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்புக்கு எம்இஎஃப் எனப்படும் மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு தலைமையேற்கிறது.
அக்கூட்டமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் சைட் ஹுசைன் இதனை கூறினார்.
மலேசியா இவ்வாண்டு ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த உயரிய பொறுப்பை மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
ஆகையால் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்கள் மூலம் கல்வி அணுகல், தொழிலாளர் நடமாட்டம் போன்ற சமூக, கலாச்சார அறைகூவல்களை எதிர்கொள்ளும் முன் முயற்சிகளுக்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கும்.
அத்துடன் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்பதன் மூலம் ஆசியான் வணிகம், தொழிலாளர் சுற்றுச்சூழல் அமைப்பில் மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பின் செல்வாக்கை அது பிரதிபலிக்கிறது.
மேலும் தொழிலாளர், வேலை வாய்ப்பு, வணிகங்கள் தொடர்பான பிராந்திய கொள்கைகளை வடிவமைக்க வாய்ப்பளிக்கும் என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக மேலும் கூறினார்.
முன்னதாக 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்புக்கு மலேசியா 5ஆவது முறையாக தலைமைத்துவ பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்