செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் விரைவான பலனைத் தரவில்லை: பிரதமர்
கோலாலம்பூர்:
மடானி அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் கொள்கைகளும் பிரபலமானவை அல்லது விரைவாக பலனைத் தருவதில்லை நான் ஒப்பு கொள்கிறேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் பெரும்பாலான மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,
தெளிவான அரசியல் உறுதியுடன் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
உதாரணத்திற்கு டீசல் மானியத்தை இலக்காகக் கொள்வதுடன் மின்சாரக் கட்டணங்களைப் பற்றி நீண்ட காலமாக பெருமளவு மானியங்களின் கசிவை மறைப்பதற்காக பெரும் பணக்காரக் தரப்பினருக்கு சென்றது.
பெரும் பணக்காரர்களை தவிர்த்து தகுதியற்ற அரை மில்லியன் வெளிநாட்டினர் இந்த மானியங்களை அனுபவித்தனர்.
இது தற்போது வெற்றிகரமாக தடுக்கப்பட்டுள்ளது.
இன்று உள்ளூர் தொலைக்காட்சியில் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஆற்றிய உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.
செலவினங்களைக் குறைக்கவும், கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கவும் டீசல் மானிய கட்டுப்பாட்டை ஜூன் 10 ஆம் தேதி அரசு அமல்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, டீசல் விலை சந்தை விகிதத்திற்கு ஏற்ப ஏற்றப்பட்டு, ரோன் 97ன் விலை ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படுகிறது.
விமர்சனங்கள் வந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மடானி அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2025, 11:10 pm
BREAKING NEWS: மாமன்னர் உத்தரவுக்கு மதிப்பளித்து பேரணியை அம்னோ ரத்து செய்கிறது: அஸ்ரப்
January 3, 2025, 9:51 pm
மாமன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்து, பேரணிகளில் பங்கேற்க வேண்டாம்: ஐஜிபி
January 3, 2025, 7:18 pm
ஆசியான் தொழிலாளர் கூட்டமைப்புக்கு எம்இஎஃப் தலைமையேற்கிறது: டத்தோ சைட் ஹுசைன்
January 3, 2025, 6:35 pm
நஜிப் ஆதரவு பேரணி ஒற்றுமை அரசாங்கத்தைப் பாதிக்காது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 3, 2025, 5:55 pm
பள்ளிகளில் பகடிவதையை ஒழிக்க அனைவரும் ஒன்றாகச் செயல்பட வேண்டும்: சமூகப் பாதுகாப்பு சங்கம்
January 3, 2025, 5:52 pm
நஜீப்பிற்கான ஆதரவு பேரணியில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது மசீச
January 3, 2025, 3:48 pm