நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் மறுசீரமைப்பு பணிகள் முடிந்தது: பாதை மீண்டும் திறக்கப்பட்டது

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் மறுசீரமைப்பு பணிகள் முடிந்து தற்போது பாதை மீண்டும் திறக்கப்பட்டது.

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்து இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மாது மரனமடைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இச்சாலை மூடப்பட்டது.

மூடப்பட்டிருந்த ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் பழுதுபார்க்கும் பணிகள் அசல் கால அட்டவணையை விட முன்னதாக முடிவடைந்து விட்டது.

உண்மையில் பிப்ரவரி 2025 இல் தான் அப்பணிகள் முடிவடைவதாக இருந்தது.

 இதனைத் தொடர்ந்து கோலாலம்பூரை பாதுகாப்பான, நிலையான, வசதியான நகரமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளது மாநகர் மன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக  கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset