நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்தாண்டு 100 வயதாகும் எனது வாழ்க்கை பல போராட்டங்கள் நிறைந்தது: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

அடுத்த ஆண்டு மத்தியில் 100 வயதை எட்டும் தனது வாழ்க்கைப் பயணத்தை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நினைவு கூர்ந்தார்.

இந்த வாழ்க்கை பல போராட்டங்கள் நிறைந்தது என்று ஒப்புக் கொண்ட அவர்,

தனது இளமை பருவத்தில் இருந்து இன்று வரை மக்களின் நலனுக்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணங்களை கடந்து செல்வதில் நான் ஒன்றாக இருப்பது அதிர்ஷ்டம் என்று அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

கடந்த 1925ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி பிறந்த துன் மகாதீர், 1946 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் அம்னோவில் இணைந்தார்.

கடந்த 1964ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் நின்றார்.

கடந்த 1974ஆம் ஆண்டு  முதன்முறையாக கல்வியமைச்சர் பொறுப்புகளை ஏற்று, பின்னர் ஜூலை 1981இல் பிரதமராக பதவியேற்றார்.

துன் மகாதீர் 22 ஆண்டுகள், அதாவது அக்டோபர் 2003 வரை தொடர்ந்து பிரதமராக பதவியில் இருந்தார்.

2018ஆம் ஆண்டு அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு திரும்பினார். அவர் மார்ச் 2020 வரை பதவியில் இருந்தார்.

எனது பதவி காலக்கட்டத்தில் நாட்டை வெற்றியடையச் செய்தது மக்களின் அடையாளம், மக்களின் போராட்ட குணம், சுயமரியாதை உள்ளவர்கள், நிலத்தையும் தேசத்தின் மானத்தையும் எதற்கும் அடகு வைக்க நான்  தயாராக இருந்தது இல்லை என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset