நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025ல் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் திட்டங்களை மடானி அரசு கொண்டுள்ளது: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

பிறக்கும் 2025ஆம் ஆண்டில் இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் திட்டங்களை மடானி அரசு கொண்டுள்ளது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.

இப்புதிய ஆண்டு நாட்டிற்கும் இந்திய சமூகம் உட்பட அனைத்து மலேசியர்களுக்கும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும்.

இந்திய சமூகத்தின் நலன்களைக் கவனிக்கும் பணியும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இவ்வாண்டும் பல திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்கான அமல்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2025ஆம் ஆண்டில் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் வழிகாட்டுதலின்படி இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

பிரதமர், இந்திய சமூகத்திற்கான கூடுதல் முயற்சிகளில் பணியாற்ற தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளார்.

அதே நேரத்தில், மற்ற அரசு நிறுவனங்கள் மூலமாகவும் பயனடையக்கூடிய பல திட்டங்களை மேற்கொள்ளவும் அவர் பணித்துள்ளார். 

மேலும் பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்திய சமூகம் உட்பட இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் நலன்களை பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது.

இதன் அடிப்படையில் அடுத்தாண்டு மேலும் பல திட்டங்கள் இந்திய சமுதாயத்திற்காக அமல்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக இத்திட்டங்கள் இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலையை மேலும் மேம்படுத்தும் என்று டத்தோஶ்ரீ ரமணன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset