நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொலை மிரட்டல் தொடர்பில் பேபி ஷிமா போலிசில் புகார்

கோலாலம்பூர்:

சமூக வலைதளங்களில் தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து பாடகி பேபி ஷிமா போலிசில் புகார் செய்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் பேபி ஷிமா ஒரு இடுகையில், 

சரவாக்கைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் பேஸ்புக் பயனர் விட்டுச் சென்ற அச்சுறுத்தும் கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார்.

அந்த கமெண்ட்டில் பேபி ஷிமா பிணமாக வீட்டிற்கு வர விரும்பவில்லை என்றால் கவனமாக இருக்குமாறு பயனர் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் பேபி ஷிமா அல்லது உண்மையான பெயர் நோர் அஷிமா ரம்லி சரவா, சிபு போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அவருடன் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்கும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா அமைச்சர் அதிகாலையில் போலிஸ் நிலையத்திற்கு வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றி என்று பேபி ஷிமா குறிப்பிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset