நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது: போலிஸ்

ஷாஆலம்:

காணாமல் போன மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பந்திங்கில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலிசார் மூவரை கைது செய்தனர்.

இது 15 வயது மாணவி என்று நம்பப்படுகிறது. அச்சிறுமி கடந்த டிசம்பர் 19ஆம் தேதி காஜாங்கில் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் உட்பட 16 முதல் 51 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் விசாரணையில் உதவுவதற்காக போலிசார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,,

மேலும் கண்டெடுக்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும், உடல் பார்த்து அடையாளம் காண முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset