நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை ஶ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் தரிசனம்

கோலாலம்பூர்:

பத்துமலை ஶ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் தரிசனம் செய்தார்.

மலேசிய சபரிமலை என்ற புகழை பெற்றிருக்கும் பத்துமலை ஶ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தில் தினசரி பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இன்று டிசம்பர் 31ஆம் தேதி இருமுடி கட்டு கம்சேங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும்.

நாளை இருமுடி கட்டிய பக்தர்கள் பாத யாத்திரையாக பத்துமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தை வந்தடைவார்கள்.

அதனை தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் தரிசனம் செய்வதற்காக ஆலயத்திற்கு வருகை தந்தார்.

பத்துமலை ஶ்ரீ ஐயப்பசுவாமி தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா குருசாமி அவரை வரவேற்றதுடன் உரிய சிறப்புகளையும் செய்தார்.

பிரமாண்டமான ஐயப்ப சன்னிதானம், அமைதியான குகைகளுக்குள் அமைந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset