நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

97 சதவீதம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர்: ஃபட்லினா

புத்ராஜெயா:

எஸ்பிஎம் தேர்வை 97 சதவீத மாணவர்கள் எழுதியுள்ளனர் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர்.

இந்த தேர்வை எழுத வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்தை அடைந்துள்ளது.

அதே வேளையில் ஏறக்குறைய 10 ஆயிரம் மாணவர்கள் தங்கள் வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதனால் இவ்விவகாரத்தில் கல்வியமைச்சு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக எஸ்பிஎம் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஃபட்லினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset