நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீர்த்தேக்க அணை உடைந்ததில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க மேம்பாட்டு நிறுவனம் பரிசீலித்து வருகிறது

ஷாஆலம்:

நீர்த்தேக்க அணை உடைந்ததில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க மேம்பாட்டு நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் இதனை கூறினார்.

சுங்கைபூலோ சௌஜானா உத்தாமா தாமான் ஶ்ரீ அலாமில் இருந்த நீர்த்தேக்க அணை கடந்த செவ்வாய்க்கிழமை உடைந்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க மேம்பாட்டு நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பில் குடியிருப்பாளர்கள் பிரதிநிதிகள், மேம்பாட்டு நிறுவனம் இடையிலான கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் இந்த விவகாரம் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset