நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்சிசி எல்ஆர்டி நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

கோலாலம்பூர்:

கிளானா ஜெயா வழித்தடத்தில் உள்ள கேஎல்சிசி எல்ஆர்சி ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனை ரேப்பிட் ரயில் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

நிலையத்தினுள் அமைந்துள்ள மின்சார உபகரண அறையில் புகை காணப்பட்டதாதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர கேஎல்சிசி பெர்சியாரான் நிலையம், அம்பாங் பூங்கா நிலையத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் அம்பாங் பார்க் நிலையம், கேஎல்சிசி நிலையம், டாங் வாங்கி நிலையம் இடையே இலவச இடைநிலை பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது என்று  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset