நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹிண்ட்ராப்பின் பதிவை ரத்து செய்யும் அரசாங்கத்தின் விண்ணப்பம் மே 14ஆம் தேதி விசாரணைக்கு வரும்: நீதிபதி

கோலாலம்பூர்:

ஹிண்ட்ராப்பின் பதிவை ரத்து செய்யும் அரசாங்கத்தின் விண்ணப்பம் வரும் மே 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அரசு தரப்பின் மூத்த வழக்கறிஞர் லீவ் ஹோங் பின் இதனை தெரிவித்தார்.

ஹிண்ட்ராப் சங்கத்தின் பதிவை ரத்து செய்ய அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு மே 14ஆம் தேதி மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.

வழக்கை விசாரிக்கவிருந்த நீதிபதி டத்தோ அகமது கமால் ஷாஹித் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இந்த மனு நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஜிஸ் முன் விசாரணைக்கு வரும்.

இன்று துணைப் பதிவாளர் லீ கா ஃபுல் இணையம் வாயிலானவழக்கு மேலாண்மையில்,

நீதிபதி ஹயாத்துல் அக்மல் முன் மே 14 ஆம் தேதி விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.

அதன்படி, இன்று விசாரணைக்கு வரவிருந்த மனு ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset