நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான அரச ஆணை உள்ளதா என்பதை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

டத்தோஶ்ரீ நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான அரச ஆணை உள்ளதா என்பதை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

வழக்கறிஞர் பல்ஜித் சிங் சித்து இதனை வலியுறித்தினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய சிறைத் தண்டனை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரச ஆணை உள்ளதா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ஆகையால் இந்த விவகாரத்தை தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் உத்தரவின் இருப்பை முழுமையாக வெளிப்படுத்துவது முக்கியம்.

இந்த விவகாரத்தை உடனடியாகவும் வெளிப்படையாகவும் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பு சட்டம், ஆட்சியாளர்களின் தனி உரிமைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். 

இந்த விவகாரத்தில் அரசு உறுதியான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சட்ட விவகாரங்கள் பிரிவினர் தெளிவுபடுத்துவதில்  முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset