நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெண்டர் ஒப்பந்ததால் ஏமாற்றப்பட்ட பெண்  250,000 ரிங்கிட்டை இழந்தார்: போலிஸ்

கோல திரெங்கானு:

இல்லாத டெண்டர் ஒப்பந்ததால் ஏமாற்றப்பட்ட பெண் வர்த்தகர் ஒருவர் 252,150 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

கோல திரெங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமத் நோர் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாதிக்கப்பட்ட 47 வயதுடைய பெண்ணை ஒரு சந்தேக நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

தெரெங்கானுவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கிளை வளாகத்திற்கு கான்வோ ரோப்கள், சீருடைகளை வழங்குவதற்கான குத்தகை உள்ளதாக கூறினார்.

ஒரு பெண்ணான சந்தேக நபர், இந்த துணி விநியோகத்தைப் பெறுவதற்காக முந்தைய விற்பனையாளரின் சப்ளையர் என்று கூறப்படும் மற்றொரு கும்பல் உறுப்பினரைத் தொடர்பு கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவரை வற்புறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தரப்பட்ட ஆவணங்களை பார்த்த பின் டெண்டரை ஏற்றுக்கொள்வதற்கு வர்த்தகர் ஒப்புக்கொண்டார்.

மேலும் 252,150 ரிங்கிட்டை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்காக ஐந்து வெவ்வேறு கணக்குகளுக்கு ஐந்து கட்டண பரிவர்த்தனைகளை செய்துள்ளார்.

பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சரிபார்த்த பின்னரே வர்த்தகர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் போலிசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset